
தைப்பே: அமெரிக்காவுடன் உறவு கொண்டாடும் தைவானைப் பழிவாங்குவதற்காக அங்கிருந்து மதுபானம் இறக்குமதி செய்ய சீனா அண்மையில் தடை விதித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தைவான் பிரதமர், அனைத்துலக வர்த்தக சட்டங்களை மீறி சீனா செயல்படுவதாகவும் தைவானுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சீன அதிகாரிகள் திடீரென முன்னறிவிப்பின்றி குறிப்பிட்ட மதுபான வகைகளை தைவானில்இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளனர் என்று தைவான் வெளியுறவு அமைச்சு கூறுகிறது.
ஆனால் இந்தத் தடை ஜனவரி 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட விதிமுறையின் கீழ் இடம்பெறு கிறது என்று சீனா கூறுகிறது.
உணவு மற்றும் மதுபானங்கள் சீனாவில் இறக்குமதி செய்ய அந்நாட்டின் சுங்கவரித் துறையில் பதிவு செய்ய வேண்டும். இந்த விதிமுறையைப் பூர்த்தி செய்யாததால் இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி தனக்கென்று சில விதிமுறைகளை சீனா வகுத்துக் கொள்கிறது,” என்று தைவான் பிரதமர் சு செங்-சாங் காட்டத்துடன் தெரிவித்தார்.
“சீனா எப்போதுமே தைவானுடன் கடினமாக நடந்துகொள்கிறது. இதைச் செய், அதைச் செய் என்று எங்களை வற்புறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே தங்களுடைய வர்த்தகம் பாதிக்கப்பட்டது குறித்து உலக வர்த்தக நிறுவனத் திடம் முறையிட தைவான் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே தைவானில் இருந்து விவசாயப் பொருள்கள், அன்னாசிப் பழங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய சீனா தடை விதித்துள்து.
இதன் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தைவான் புகார் கூறி வருகிறது.
சுயமாக ஜனநாயக ஆட்சி நடத்தி வரும் தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூக்குரலிட்டு வருகிறது.
தேவை ஏற்பட்டால் ஒரு நாள் பலவந்தமாக தைவான் தன்னுடைய நாட்டுடன் சேர்த்துக் கொள்ளப்படும் என்று சீனா பகிரங்கமாக கூறி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் தைவானில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகத்தை ஆதரிக்கும் அதிபர் சாய் இங்-வென் வெற்றி பெற்றதில் இருந்து ராணுவம், பொருளியல் ரீதியாக சீனா மிரட்டி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு போர் விமானங்களை தைவான் வான்வெளியில் ஊடுருவச் செய்து தனது வலிமையை சீனா காட்டிக் கொண்டது. தைவானுக்கு அருகே போர்க் கப்பல்களையும் அனுப்பி தைவானுக்கு அது அழுத்தம் கொடுத்து வருகிறது.
அண்மைய காணொளிகள்
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
19 Sep 2022
12 Sep 2022
4 Sep 2022
28 Feb 2021
30 Aug 2020
16 Aug 2020
9 Aug 2020
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan