2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

சிறுநீரக கற்களை சிறுநீரில் வெளியேற்றும் இந்த கருப்பு பொருள் பத்தி தெரியுமா சார் – Top Tamil News

“கொழுத்தவனுக்கு கொள்ளு ,இளைத்தவனுக்கு எள்ளு” என்று கிராமத்தில் ஒரு பழ மொழி சொல்வார்கள் .அதாவது எள்ளு கொடுத்தால் உடல் எடை கூடும் ,கொள்ளு கொடுத்தால் உடல் இளைக்கும் .அந்தளவுக்கு கொள்ளு பல ஆரோக்கிய நன்மைகள் தர வல்லது .நீரிழிவு நோய் ,மூல நோய் ,இதய நோய் ,போன்ற நோய்களை குணப்படுத்த கொள்ளு ரசமாகவோ இல்லை சூப் வைத்தோ குடிக்கலாம் .மேலும் கொள்ளுவை சுண்டல் செய்து கூட சாப்பிட்டால் உடலுக்கு பலம் சேர்க்கும் .மேலும் உடல் எடை குறையும்
kidney
. மேலும் இந்த கருப்பு கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். அதேபோல் சிறுநீரக கற்களை வெளியேற்ற கூடியது. மேலும் இடுப்பு வலி கொண்டவர்கள் இந்த கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் அந்த வலி காணாமல் போகும்
சளி, காய்ச்சல் குணமாக:
சளி காய்ச்சல் போன்ற தொல்லையால் அவதி படுவோர் கொள்ளுவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரைப் பருகினால், ஜலதோஷம் குணமாகும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால், காய்ச்சலை குணமாக்கும். மேலும் வாரம் இரண்டு முறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் குணமாகும்,மேலும் மல சிக்கல் குணமாகும்  ,நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் ,எலும்புகள் வலிமை பெறவும் ,ஆண்களுக்கு உடல் சக்தியும் இந்த கொள்ளு மூலம் 
கிடைக்கும் .
© 2019 Top Tamil News

source