2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

சினிமா பாணியில் பழிக்குப் பழி – சென்னையில் ரவுடி வெட்டி படுகொலை.! – Puthiya Thalaimurai

சென்னையில் பழிக்குப் பழியாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவன் சந்தீப் குமார் (29). A கேட்டகரி ரவுடியான இவன் மீது அயப்பாக்கம் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
image
இந்நிலையில் ஆட்டோ ஓட்டநராக பணியாற்றி வந்த ரவுடி சந்தீப் குமார் இன்று மாலை இந்திரா நகர் நடுவன்கரை பாலம் அருகே தனது ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் இருந்தபடியே கஞ்சா புகைத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சந்தீப் குமாரை தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
image
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அண்ணா நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிரற்றுக் கிடந்த ரவுடி சந்தீப் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
image
பின்னர் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரவுடி சந்தீப் குமார் மற்றும் கூட்டாளிகளால் கொல்லப்பட்ட மற்றொரு ரவுடியான ஆதித்யா என்பவனின் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க இந்த கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இந்த கொலையில் ஆதித்யாவின் கூட்டாளிகளான ரஞ்சித், அரவிந்த் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு அருகேயுள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய கும்பலை அண்ணா நகர் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருசக்கர வாகனங்களை திருடி வ…
’எங்களை தடுத்தால் போலீசையும் வெட்டுவோம்’.. கோயில் கொடை வி…
குறுக்கே வந்த தெருநாயால் தடுமாறி விழுந்த ம…
Sep 22, 2022 0:04
உ.பியில் பள்ளிக்குள் ஹாயாக படுத்திருந்த மு…
Sep 21, 2022 23:44
ஆசிரியரின் அலட்சியம்! – 18 மணிநேரம் வகுப்…
Sep 21, 2022 23:12
வாழைப்பழத்தை தராமல் ஏய்த்த பாகன் – தூக்கிப…
Sep 21, 2022 23:13
அழுத்தம் கொடுக்கும் பாஜக, அதிமுக; ஆ.ராசா வ…
Sep 21, 2022 22:57
சோதனையை நிறுத்துங்கள் டிராவிட்.. இந்திய அண…
Sep 21, 2022 18:23
ரஷ்யாவுடன் இந்தியாவின் வர்த்தகம் இனி டாலரி…
Sep 21, 2022 17:03
வட மாநிலங்களில் அதிகரிக்கும் டெங்கு – ஏன் …
Sep 20, 2022 21:29
மறந்துபோகும் நினைவுகள்… கொரோனாவிலிருந்து…
Sep 20, 2022 15:29
அழுத்தம் கொடுக்கும் பாஜக, அதிமுக; ஆ.ராசா விவகாரத்தில் தொடர்ந்து திமுக மவுனம் …
Sep 21, 2022 22:57
பொது விநியோக திட்டத்தால் தமிழகத்தில் விலைவாசி உயர்வின் தாக்கம் குறைவு – ஜெயரஞ…
Sep 21, 2022 21:55
இதுவரை காணாத அளவுக்கு! நெப்டியூனின் தெளிவான வளையங்களை படம்பிடித்த ஜேம்ஸ் வெப்!
Sep 21, 2022 21:30
சுதந்திர போராட்டக்காரர் பட்டியலில் சாவர்க்கரா? – கேரள காங்கிரஸார் வைத்த பேனரா…
Sep 21, 2022 20:03
துப்பாக்கியுடன் ஒரு ஆசுவாசம்!! அஜித்தின் ‘ஏகே61’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்…
Sep 21, 2022 18:40
ஒரு கப் டீ சாப்டுங்க சார்! – டீயிலுள்ள நன்மைகளும் தீமைகளும்! தெரிந்து கொள்ளுங…
Sep 21, 2022 18:36
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

source