
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை..
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு : ரூ.1,30,800/- வரை சம்பளம்..
அரசின் ஆரம்பச் சுகாதார நிலைய வேலை : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
போலீசார் என்னை மிரட்டி ஒத்துகொள்ள வைத்தனர்: கிரீஷ்மா அந்தர் பல்டி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 16 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் இன்று 94,369 பேர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1, 20,000 பேருக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும். நேற்று 97,310 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணிக்கு நடை சாத்தும் வரையிலும், மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இன்று காலை 7 மணி வரை 27,812 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், சபரிமலை பம்பை ஆற்றை சுத்தம் செய்ய குள்ளார் அணை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பம்பையில் புனித நீராடும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பத்தனம் திட்ட மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க : Cyclone Mandous : மாண்டஸ் ஆடிய கோரத்தாண்டவம்… புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒரு பார்வை..
பம்பை ஆற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கையாக குள்ளார் அணை திறக்கப்படும் எனவும், ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஆற்றின் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க மாவட்ட ஆட்சியரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரியுமான திவ்யா எஸ் ஐயர் உத்தரவிட்டார்.
டிசம்பர் 27ம் தேதி வரை தினசரி 15 ஆயிரம் கன மீட்டர் நீர் வெளியேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பம்பா திரிவேணி சரஸ் பகுதி மற்றும் பம்பை கக்காடு நதிகளின் கரையோரங்களில் இருப்பவர்கள் மற்றும் சபரிமலை பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayyappan temple in Sabarimala, Kerala, Tamilnadu
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan