2022-12-01

TNLiveNews

Minute to Minute NEWS!

கோவை தொழிற்சாலைகளில் பசுமை புரட்சி தைவானுடன் தொழில் வர்த்தக ஒப்பந்தம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

கோவை;கோவையில் பசுமை தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில், தைவானுடன் தேசிய உற்பத்தி குழு மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

கோவை இந்திய தொழில் வர்த்தகசபை அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த தேசிய உற்பத்தி குழுவின் இயக்குனர் சந்திப்குமார் நாயக் பேசியதாவது:

தேசிய உற்பத்தி குழுவின் நோக்கம், எல்லா தொழிற்சாலைகளையும் மேம்படுத்தி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகும். அந்த அடிப்படையில், இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் தைவான் இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தைவான் தொழில் வல்லுனர்கள் கோவையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு என்ன அடிப்படை திட்டங்கள் தேவை என்பதை அறிந்து முழுமையான ஆலோசனை வழங்க உள்ளனர். கோவை தொழில் துறையினரும் தங்கள் தொழிற்சாலைகளுக்கு என்ன உதவிகள் தேவை என்பதை கேட்டு ஆலோசனை பெறலாம்.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கோவையை சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரமாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தண்ணீர் மறுசுழற்சி

தைவான் தேசிய உற்பத்தி குழு இயக்குனர் ஷெரின் லிங் பேசுகையில், ”பசுமைப் புரட்சியை தொழில்துறையில் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தைவானில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன பசுமை புரட்சியை தொடர்ந்து, தொழிற்சாலைகளிலும் பசுமை புரட்சியை செய்ய இருக்கிறோம். தண்ணீர் மறுசுழற்சி திட்டத்தையும் செய்து வருகிறோம். இதை கோவையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்க ஆர்வமாக இருக்கிறோம்,” என்றார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ஸ்ரீராமுலு, செயலாளர் அண்ணாமலை மற்றும் தைவான் நாட்டின் எட்டு பேர் கொண்ட வல்லுனர் குழுவினர் பங்கேற்றனர்.

கோவை;கோவையில் பசுமை தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில், தைவானுடன் தேசிய உற்பத்தி குழு மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source