2022-09-28

TNLiveNews

Minute to Minute NEWS!

காலிறுதியில் இந்திய ஜோடி – Dinamalar

ஜகார்த்தா: ஐ.டி.எப்., தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் பிரஜ்வல் தேவ், ரிஷி ரெட்டி ஜோடி முன்னேறியது.

இந்தோனேஷியாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்வல் தேவ், ரிஷி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் கிரிட்டின், காங்கார் ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 6-3 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டை 6-4 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சுரேஷ்குமார், சோமானி ஜோடி 6-3, 6-4 என மற்றொரு இந்திய ஜோடி பத்ரிநாத், சண்முகத்தை வென்று காலிறுதிக்குள் நுழைந்தது.

சசிக்குமார் அபாரம்

ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், இந்தோனேஷியாவின் சுசாண்டோவை சந்தித்தார். இதில் சசிக்குமார் 6-2, 6-0 என எளிதாக வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அபினவ் சண்முகம், அமெரிக்காவின் கோட்செனிடம் 4-6, 6-3, 6-7 என போராடி வீழ்ந்தார்.

Dinamalar iPaper

Home கருத்தைப் பதிவு செய்ய
மேலே செல்ல ↑
All Rights Reserved

source