2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

காதலியை கரம்பிடிக்கும் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல்? – வெளியான தகவல் – Puthiya Thalaimurai

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துவக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியை வருகிற ஜனவரி அல்லது மார்ச் மாதத்தில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ‘12B’, ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதுடன், தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவராக வலம் வருவபர் பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி. இவரின் மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான கே.எல்.ராகுலும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் வருகிற ஜனவரி அல்லது மார்ச் மாதம் மிகப் பிரம்மாண்டமாக நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களின் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
image
அதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், இருவரும் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் சமூவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. ஆனால் அப்போது தங்களது காதலை இருவரும் உறுதிசெய்யாதநிலையில், அதியா ஷெட்டியின் தம்பி அஹானின் முதல் படமான ‘தடாப்’ பட விழாவில்தான் இருவம் தங்களின் காதலை உறுதி செய்தனர். தொடர்ந்து, ராகுலும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள வெளிநாடு செல்லும்போது அதியாவும் உடன் சென்று வந்தார்.
image
சமீபத்தில்கூட அறுவை சிகிச்சைக்காக ராகுல் ஜெர்மனி சென்றபோது அவருக்கு துணையாக அதியாவும் சென்றிருந்தார். இந்நிலையில், 2023-ம் ஆண்டு ஜனவரியில் இவர்களது திருமணம் நடக்கவிருப்பதை கிட்டத்தட்ட சூசகமாக அதியாவின் தந்தை சுனில் ஷெட்டி உறுதி செய்துள்ளார். தனது ‘Dharavi Bank’ படத்தின் புரமோஷன் விழாவில் கலந்துகொண்ட சுனில் ஷெட்டியிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன்’ எனக் கூறி உள்ளார். இதன்மூலம் கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டி திருமணம் ஜனவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது உறுதியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.
மொத்தம் 20 அணிகள்.. அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் இத்தன…
இதனால்தான் சஞ்சு சாம்சனை எடுக்கவில்லை; ஹர்திக் பாண்டியா ச…
வங்கதேச தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீர…
Nov 23, 2022 22:33
ஜாமீன் பெற்று தலைமறைவான பிரபல ரவுடி பினு க…
Nov 23, 2022 22:22
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர்-விலகி…
Nov 23, 2022 22:09
ஆண்களுக்கு இணையாக பெண்களும் அரசியலில் பங்க…
Nov 23, 2022 22:07
குடித்துவிட்டு வகுப்பறையில் ஒய்யாரமாக தூங்…
Nov 23, 2022 21:20
குளிர்காலத்தில் மலச்சிக்கல் ஆபத்தானதா? செய…
Nov 23, 2022 20:18
இதனால்தான் சஞ்சு சாம்சனை எடுக்கவில்லை; ஹர்…
Nov 22, 2022 22:42
தைராய்டை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி – நன்…
Nov 22, 2022 22:12
-3 டிகிரி குளிருடன் சென்னையில பனிப்பொழிவே …
Nov 23, 2022 11:14
குடித்துவிட்டு வகுப்பறையில் ஒய்யாரமாக தூங்கிய பிரின்சிபல் – வைரலாகும் வீடியோ
Nov 23, 2022 21:20
'சந்தேகம் வராமல் இருக்க 4 மாதம் சம்பளம் கொடுத்து' ராணுவத்தில் வேலை-ரூ. 16 லட்…
Nov 23, 2022 19:52
‘காந்தாரா’ ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு -தமிழிலும் பார்…
Nov 23, 2022 18:23
'விலையை கேட்டதும் தலைக்கேறியது போல இருக்கு'- மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்…
Nov 23, 2022 18:03
‘வாரிசு’ படம் ஆந்திராவில் திட்டமிட்டப்படி வெளியாகுமா? – தயாரிப்பாளர் சங்கம் ம…
Nov 23, 2022 17:43
அதிக தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்தா? – புரூஸ் லீ இறப்புக்கு இதுதான் காரணமா?
Nov 23, 2022 17:18
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

source