2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

கல்விக் கடன் ரத்து வாக்குறுதியை நம்பி தொழில் வாய்ப்பினை இழக்கும் இளைஞர்கள்! – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

பா.ஜ.,வில் இணைகிறார் தி.மு.க.,- எம்.எல்.ஏ.,? அண்ணாமலை … Comments 70
ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரமா இது? Comments 160
மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிக்கு … Comments 88
அக்கவுண்டில் தவறுதலாக ஏறிய ரூ.11,677 கோடி! அதிலும் லாபம் … Comments 24
'ஆவின்' பொருட்களில் மத வாசகம்? Comments 122
ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரமா இது? Comments 160
ஹிந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா கக்கிய விஷம்: … Comments 141
'ஆவின்' பொருட்களில் மத வாசகம்? Comments 122
30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் – திமுக அளித்த இந்த வாக்குறுதியை கேட்டு, வேலைவாய்ப்பு இல்லாத ஏராளமான ஏழை இளைஞர்கள் ஸ்டாலினை சமூக ஊடகங்களில் புகழ்ந்தார்கள். இந்த வாக்குறுதியை நம்பி அவர்கள் திமுகவிற்கு வாக்களித்திருக்கவும் கூடும்.

ஆனால் ஓராண்டை கடந்த பின்னரும் கல்விக் கடன் ரத்து பற்றிய எந்த செய்தியும் காணோம். இந்த வாக்குறுதியை நம்பியிருந்தவர்களின் சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிற்கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு போன்ற எந்த வங்கி சேவைகளையும் பெற முடியாமல் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2021 தமிழக பொதுத் தேர்தலுக்கு முன்பாக திமுக ஏராளமான கவர்ச்சிகர வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பதும் ஒன்று. இந்த வாக்குறுதி 2016 சட்டமன்ற பொதுத் தேர்தல், 2019 பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போதும் வாக்குறுதியாக திமுக., அறிவித்தது. மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன் தொகையை எப்படி மாநில அரசு ரத்து செய்ய முடியும் என்ற கேள்வியை அதிமுகவினர் எழுப்பினர். மாணவர்களின் நிலுவை கடன் மதிப்பிற்கான தொகையை மாநில அரசு செலுத்தி கடன் ரத்து அறிவிப்பை நிறைவேற்றும் என்றனர்.

latest tamil news

திமுக., ஆட்சிக்கு வந்து தற்போது ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் ஏராளமான இளைஞர்களுக்கு நேரடி பலன் வழங்கக் கூடிய கல்விக் கடன் ரத்து வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எப்போது நிறைவேற்றப்படும், எப்படி நிறைவேற்றப்படும் என்ற தகவலும் இல்லை. இதனால் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் புரியாமல் குழம்பித் தவிக்கின்றனர். குறிப்பாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால், உள்ளூரில் ஏதாவது தொழில் நடத்தி செட்டில் ஆகலாம் என்று நினைக்கும் ஊரகப் பகுதி இளைஞர்களின் தொழில் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மோசமடைந்துள்ள சிபில் ஸ்கோர்!

latest tamil news

கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் வாங்கிய கடனை பலரும் கட்டவில்லை. கல்விக் கடன் தொடர்பாக அழுத்தம் தரக்கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவால் வங்கிகளாலும் இதனை வசூல் செய்ய முடியவில்லை. ஆனால் கடனாளியின் நம்பகத்தன்மையை அறிய உதவும் சிபில் ஸ்கோரில் இது எதிரொலிக்கிறது. கல்விக் கடன் தவனையை செலுத்தாதவர்களுக்கு இந்த ஸ்கோர் 300, 400 என்கிற மோசம் என்கிற அளவில் வந்துள்ளது.

ஏன் சிபில் ஸ்கோர் முக்கியம்?

எந்த வகையான கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் அந்த நபரின் கடன் தகுதியினை காட்டும் சிபில் ஸ்கோரையே முதலில் ஆராயும். சிபில் ஸ்கோர் 740க்கு மேல் இருந்தால் கடன் வாங்குபவர் கடனைத் தாமதமின்றி சரியான நேரத்தில் செலுத்தக் கூடியவர் என்றறிவர். இதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

latest tamil news

மோசமான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு வாகனக் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், விவசாயக் கடன் போன்ற எந்தக் கடனும் கொடுக்கப்படுவதில்லை. வெளியில் அதிக வட்டிக்கு தான் வாங்குவர். அதனை அடைக்க படாத பாடு பட வேண்டியிருக்கும். தற்போது இந்த நிலையை தான் கல்விக் கடன் பெற்ற பலரும் சந்திக்கின்றனர். ரத்து அல்லது ரத்து இல்லை என்று அறிவித்தால் இனியாவது சிறுக சிறுக கடனை அடைத்து எதிர்காலத் தேவைக்கு கந்து வட்டியை நாடிச் செல்லாமல், வங்கியிடம் கடன் பெற முடியும் என்பது இளைஞர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எங்களின் கோபத்திற்கு தி.மு.க., ஆளாகக் கூடும் என்கின்றனர்.

30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் – திமுக அளித்த இந்த வாக்குறுதியை கேட்டு, வேலைவாய்ப்பு இல்லாத ஏராளமான ஏழை இளைஞர்கள் ஸ்டாலினை சமூக
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source