
கிளி சொல்லும் அட்வைஸ்..கண்டிப்பா இதை பாருங்க..!
கரையைக் கடந்த மாண்டஸ் புயல்… அடுத்தது என்ன?- புதிய அப்டேட்!
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்!
மாண்டஸ் புயல்: அறுந்து கிடந்த மின்கம்பியால் பெண் உட்பட இருவர் பலி!
மாண்டஸ் புயல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ளது. இதனால் நாளை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 85 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது புயல் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது.
தற்போதே சென்னையில் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 1 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னையை நெருங்கிவிட்ட புயல் இன்னும் 2 மணி நேரத்தில் முழு வீச்சில் கரையைக் கடக்கத் தொடங்கும். புயலின் கண் பகுதி இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை விடிவதற்குள் புயல் முழுவதும் கரையைக் கடந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மாண்டஸ் புயல்: திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்.. பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
புயல் காரணமாக ஈசிஆர் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் அநேக இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone Mandous, Tamilnadu, Weather News in Tamil
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan