2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

கடலுார் : கடலுார் மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் நகர கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு பண்ருட்டியில் நடந்தது.

கூட்டத்திற்கு, அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத் தலைவரும், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் மாநில தலைவருமான பொன் குமார் தலைமை தாங்கி, தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்கொற்றவன் வரவேற்றார். சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சிகள், அரசு திட்டங்கள் குறித்து நிர்வாகிகள் பேசினர்.

நிகழ்ச்சியில் கடலுார் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் பாபு, மாநில துணை செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் பிரபு, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை செயலாளர்கள் ரபீக், முத்துக்குமரன்,

செய்தி தொடர்பாளர் கோவிந்தராசன், நகர செயலாளர் தனகொடி, அமைப்பாளர் இந்திரன், பண்ருட்டி நிர்வாகிகள் அண்ணாதுரை, அருள், முருகன், இன்ஜினியர் அருள், சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கடலுாரில் வரும் மாதத்தில் முதல் மாவட்ட மாநாடு நடத்துவது, சங்க உறுப்பினர்கள் ஆண்டு சந்தா, ஆயுள் சந்தா செலுத்த வேண்டும், நகர அமைப்பு, ஒன்றிய அமைப்புகளில் விரைவில் கூட்டம் நடத்தி சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலுார் : கடலுார் மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் நகர கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு பண்ருட்டியில்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source