2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரசிகர்கள் அறிந்திறாத 5 ஸ்வாரஸ்ய சாதனைகள், விவரங்கள் – வித்யாச பதிவு – Cric Tamil

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடர்பான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடை காலம் கொலகாலமாக நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு தரத்திலும் பணத்திலும் உலகக் கோப்பை மற்றும் ஐசிசியையும் மிஞ்சி சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது. அத்துடன் ஐபிஎல் என்றாலே ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் எதிர்பாராத திருப்பங்களுக்கு எப்போதுமே பஞ்சமிருக்காத காரணத்தாலேயே இவ்வளவு ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளது.
IPL 2022 (2)IPL 2022 (2)
மேலும் ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் விளையாடிய போட்டிகள் மற்றும் சாதனைகள் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஆனாலும் சில நிகழ்வுகளும் சாதனைகளும் அபாரமானதாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நிற்காமல் மறைந்து விடும். அது போல ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரும்பாலான ரசிகர்கள் அறிந்திராத 5 சுவாரசியமான விவரங்களைப் பற்றி பார்ப்போம்:
5. மெய்டன் ஐபிஎல்: 563 டெஸ்ட் விக்கெட்டுகள் 381 ஒருநாள் விக்கெட்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் மிரட்டிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் கிளன் மெக்ராத் கேரியரின் கடைசி நேரத்தில் தான் ஐபிஎல் வந்தது. அதனால் முதலும் கடைசிமாக கடந்த 2008இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக முழுமையாக 14 போட்டிகளில் விளையாடிய அவர் 12 விக்கெட்களை 6.61 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசி டி20 கிரிக்கெட்டிலும் தம்மால் அசத்த முடியும் என்று நிரூபித்தார்.
mcgrathmcgrath
குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக முதல் போட்டியிலேயே முதல் ஓவரிலேயே ரன்களை கொடுக்காத அவர் விராட் கோலியை அவுட்டாக்கி மெய்டன் ஓவராக வீசி மிரட்டினார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் மெய்டன் ஓவர் வீசிய முதல் பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
4. அன்றும் இன்றும் ஜாஹீர்: மெக்ராத் போல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக 592 விக்கெட்டுகளை சாய்த்து சர்வதேச கிரிக்கெட்டில் மிரட்டிய இவரும் ஐபிஎல் தொடரில் 100 போட்டிகளில் 102 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தலாகவே செயல்பட்டார்.
zaheerzaheer
அதை விட 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூரு களமிறங்கிய வரலாற்றின் முதல் போட்டியில் விளையாடிய அவர் 2015இல் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி களமிறங்கிய வரலாற்றின் 500வது போட்டியிலும் விளையாடினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 1வது போட்டியிலும் 500வது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரராக ஜாஹீர் கான் சாதனை படைத்துள்ளார்.
3. 49 லட்சம்: ஐபிஎல் தொடரால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக சம்பாதிக்கும் பிசிசிஐ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு வாரியங்களை பின்னுக்கு தள்ளி ஐசிசியை மிஞ்சி உலகின் நம்பர் ஒன் பணக்கார கிரிக்கெட் வாரியமாக அவதரித்துள்ளதை அனைவரும் அறிவோம். அதிலும் 2023 – 2027 வரையிலான காலகட்டத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமம் சமீபத்தில் 48,930 கோடி என்ற உலகமே திரும்பிப் பார்க்கும் பிரம்மாண்ட தொகைக்கு ஏலம் போனது.
IPL vs EPLIPL vs EPL
அந்த காலகட்டத்தில் 410 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் 1 போட்டிக்கு 118 கோடிகளை சம்பாதிக்கப் காத்திருக்கும் பிசிசிஐ ஒரு ஓவருக்கு 2.95 கோடிகளையும் 1 பந்து வீசினால் 49 லட்சத்தையும் சம்பாதிக்கப் போகிறது என்பது ரசிகர்கள் ஆச்சரியப்படும் விவரமாகும்.
2. யூடியூப் யுகம்: அப்படி இன்று ஒரு ஐபிஎல் பந்தின் விலை 49 லட்சமாக இருக்கும் நிலையில் 2010 சீசனின் ஒளிபரப்பு உரிமையை பிரபல கூகுள் நிறுவனம் குறைந்த விலைக்கு வாங்கி தங்களுடைய யூடியூப் இணையத்தில் 5 நிமிட தாமதத்துடன் ஒளிபரப்பு செய்தது.
Hot-starHot-star
அதனால் அந்த சமயத்தில் இன்டர்நெட் வசதியுடைய யார் வேண்டுமானாலும் இலவசமாக யூடியூப் இணையத்திற்கு சென்று ஐபிஎல் தொடரை கண்டுகளித்த நிலைமை இருந்தது. அந்த வகையில் உலகிலேயே யூடியூப் இணையத்தில் ஒளிபரப்பான முதல் கிரிக்கெட் தொடர் என்ற பெருமையும் ஐபிஎல் பெற்றது.
1. பணக்கார மும்பை: ஐபிஎல் வளர்ந்தது போலவே அதில் விளையாடும் அணிகளின் மதிப்பும் பன்மடங்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் அம்பானி அவர்களை உரிமையாளராக கொண்ட மும்பை அணியின் மதிப்பு தற்போது 1.3 பில்லியன் டாலர் என்று பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
இதையும் படிங்க : சச்சினுக்கு அப்புறம் இவர் விளையாடுறத பாக்கத்தான் நான் வெயிட் பண்றேன் – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்
அது அமெரிக்காவின் பிரபல எம்எல்பி கூடைப்பந்து தொடரில் விளையாடும் 6 அணிகள், பிரபல என்ஹெச்எல் ஹாக்கி தொடரில் விளையாடும் 27 அணிகளின் மதிப்புக்கு சமமாகும். அந்த வகையில் உலக அளவில் பணக்கார விளையாட்டு அணிகளில் முதன்மையாக ஜொலிக்கும் மும்பை தற்போது தென்னாபிரிக்கா மற்றும் துபாயிலும் புதிய கிளை அணிகளை வாங்கியுள்ளதால் மேலும் பணக்கார அணி நிர்வாகமாக மாறப்போவது குறிப்பிடத்தக்கது.

source