2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

எந்த நாட்டில் இந்த டிராக்டர் ஓடுது? சொன்னால் பரிசு – ட்விட்டரில் போட்டி நடத்திய ஆனந்ந் மஹிந்திரா! – News18 தமிழ்

மேடையில் புர்கா அணிந்து நடனமாடிய கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்
மெட்ரோ ரயிலில் ‘க்யூட்’ செல்ஃபி எடுத்துக் கொண்ட வயதான தம்பதியர்.!
WATCH: காதோடு சொல்… காதோடு சொல்… வெளியானது பாடல் வீடியோ!
WATCH: 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜயின் தீ தளபதி பாடல்!
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பல்வேறு வாகனங்களை தயாரித்து வருகிறது. அவற்றுள் மஹிந்திரா டிராக்டர்ஸ் மற்றும் ஸ்கார்பியோ கார் போன்றவை மிக பிரபலமான வாகனங்கள் ஆகும். குறிப்பாக, மஹிந்திரா டிராக்டர்ஸ் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் விவசாயிகளின் நண்பனாக இருந்து வருகிறது.
இத்தகைய சூழலில், வெளிநாடு ஒன்றில் மஹிந்திரா டிராக்டர்கள் அணிவகுத்து வரும் ஃபோட்டோ மற்றும் வீடியோ ஒன்றை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா கடந்த புதன்கிழமை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அதனுடன், மஹிந்திரா டிராக்டர் மாடல் (டாய்) ஒன்றின் படமும் இருந்தது.
அவரது பதிவில், “வீடியோவில் காணப்படுபவை மஹிந்திரா டிராக்டர்கள் தான். ஆனால், இது எந்த நாடு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கு சரியான பதிலை தெரிவிக்கும் முதல் நபருக்கு இந்தப் பதிவில் இருப்பதைப் போன்ற மாடல் டிராக்டர் ஒன்றை நான் பரிசளிக்க இருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
மளமளவென குவிந்த பதில்கள்
பொதுவாகவே, டிவிட்டரில் நிறைய ஃபாலோயர்களைக் கொண்ட சமூகவலைதள செல்வாக்கு கொண்ட நபராக ஆனந்த் மஹிந்திரா இருந்து வருகிறார். தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க சிந்தனைகள், மனிதநேயத்தை தூண்டும் பதிவுகள், இயற்கை அழகுக்காட்டிகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

These are Mahindra Tractors of course, but which country is this? I’ll send the first person with the right answer a scale model tractor shown in the accompanying pic. pic.twitter.com/TkA1Y5AlwD

இத்தகைய சூழலில், அவரது மஹிந்திரா டிராக்டரை மையமாக வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்கள் மளமளவென குவிந்தன. பெரும்பாலான நெட்டிசன்கள் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், நார்வே என்று நிறைய நாடுகளின் பெயர்களை பதிலாக பதிவு செய்திருந்தனர்.
Also Read : இந்த படத்தில் மறைந்திருக்கும் யானையை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?
வீடியோவில் உள்ள கொடியை மையமாக வைத்து, அது எந்த நாடு என்ற ஆராய்ச்சியில் ஒருசில நெட்டிசன்கள் இறங்கினர். அதை வைத்து சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டனர். ஆனால், மஹிந்திரா நிறுவனத்தின் மீது பற்று கொண்ட நெட்டிசன் ஒருவரின் பதில் சற்று வித்தியாசமானதாக இருந்தது. “எந்த நாடாக இருந்தால் என்ன, மஹிந்திரா எப்போதுமே மஹிந்திரா தான்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Don't matter where it is? Mahendra is always a Mahendra…whether it is in Germany or Canada…..

பரிசை தட்டிச் சென்ற இருவர்
ஏராளமான நெட்டிசன்கள் பதில் அளித்திருந்த நிலையில், வீடியோவில் காட்டப்படும் நாடு எது என்று சரியான பதில்களை தெரிவித்த நெட்டிசன்களின் பெயரை ஆனந்த் மஹிந்திரா அறிவித்தார்.
Also Read : இனி ATM இயந்திரத்திலேயே சட்னியுடன் இட்லி கிடைக்கும்… எந்த ஊரில் தெரியுமா?
அவரது பதிவில், “வீடியோவில் இருந்த கொடிகள் நிறைய பேருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. இது பிரேசில் நாட்டின் தாஸ் இர்மாஸ் நகரம் ஆகும். இங்கு குடியேறிய ஜெர்மனியர்கள் கொண்டாடிய திருவிழாவின்போது இந்த டிராக்டர் அணிவகுப்பு நடைபெற்றது” என்று குறிப்பிட்டார்.

The flags confused most people. This is Dos Irmãos, *Brazil* A Fest celebrating the arrival of German settlers. @Shivana08596105 beat @MayankS29063346 by 0.1 sec! However, I think both deserve the prize, don't you? Can you both please DM @MahindraRise with your contact details? https://t.co/StoxR0jERr

அத்துடன், சிவானா மற்றும் மயாங் ஆகிய இருவர் சரியான பதிலை கூறியிருந்ததாகவும், அவர்கள் இருவருக்குமே பரிசளிக்க விரும்புவதாகவும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார். பரிசை பெறும் வகையில் தொடர்பு விவரங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளுமாறும் அந்த பயனாளர்களை அவர் அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anand Mahindra, Trending, Video

source