2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் எதையும் வெல்வீர்கள்… (மார்ச் 31, 2022) – News18 தமிழ்

இந்ததேதியில் பிறந்தவர்கள் இன்று ஏழைகளுக்கு இனிப்புகளை தானமாக வழங்கவும்
உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?
எண் கணித ஜோதிடம் .. உங்கள் பிறந்த தேதிக்கு என்ன பலன்கள்.?
இந்ததேதியில் பிறந்தவர்கள் இன்று பச்சை இலைக் காய்கறிகளை தானம் செய்யவும்
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
அனைவரையும் ஈர்க்கும் நிர்வாகத் திறன் மூலம் பணியிடத்தில் உள்ள சூழ்நிலைகளை எளிதாக வெல்வீர்கள். ஏற்கனவே தலைவராக இருப்பவர்கள் விசுவாசத்தைப் பெறுவார்கள் மற்றும் தலைமைக்கான போட்டி நடைபெற்றால் வெற்றி பெறுவார்கள். அரசியல்வாதிகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வார்கள். விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளருடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இலாபம், பண ரீதியான நன்மைகளைப் பெற, வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு இன்று குங்குமப்பூ அல்லது இனிப்புகளை சாப்பிட வேண்டும். இன்று உங்கள் பயணத்தில் பழைய நண்பரை சந்திப்பீர்கள்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 1
நன்கொடைகள்: மஞ்சள் நிற சிட்ரஸ் பழங்களை தானம் செய்யுங்கள்
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்கள் சகாக்களுடன் வாக்குவாதங்கள் மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடிய மிகவும் மந்தமான நாளாகக் கானபப்டுகிறது. வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை அடைவதில் ஒரு சில சிரமங்களை சந்திப்பீர்கள். நீங்கள் இன்று புத்தகங்கள் மற்றும் இணையத்தில் உங்கள் நேரத்தை செலவிட இது சிறந்த நாள். உங்களுடைய முதலீட்டில் இருந்து வருமானம் பெறுத் தாமதமாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 6
தானம்: கால்நடை மற்றும் யாசகர்களுக்கு தண்ணீர் வழங்குங்கள்
#எண் 3( நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று நாளின் முதல் பாதி முழுவதும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும் மற்றும் உங்கள் கனவுகளை நிறைவேறும். உங்கள் போட்டியாளர்களாக இருந்தாலும் உங்கள் பார்ட்னரை ஈர்க்க இது மிகச்சிறந்த நாள். திருமணத்திற்காக உங்கள் காதலை ப்ரொபோஸ் செய்ய சிறந்த நாள். பெட்டிங் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான நேரம் இது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கோர வேண்டும், வியாபாரிகள் இன்று சகஜமாக ஒத்துழைக்க வேண்டும். தயவு செய்து இன்று அசைவம் சாப்பிடுவது அல்லது மது அருந்துவதை தவிர்க்கவும்
அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: கோவிலில் குங்குமப்பூ தானம் செய்யுங்கள்
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இந்த நாள் உத்திகள் மற்றும் ஆவணங்களை உருவாக்குவதில் நீங்கள் செலவிடுவீர்கள். எனவே பயணம் மற்றும் வேலைக்கான நேர்காணல்களைத் தவிர்க்கவும். பெரும்பாலான நேரத்தை சட்ட ரீதியான நடைமுறைகளில் செலவிட நேரிடும். நிதி மற்றும் பார்த்னர்களுடன் கவனமாக இருங்கள். தனிப்பட்ட உறவுகளில் எந்த குழப்பமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். சமைக்காத உணவுகளை சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடைகள்: முதியோர் காப்பகங்களுக்கு செடிகளை தானமாக வழங்கவும்
#எண் 5 (நீங்கள் 5th, 14 th, 23rd ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று எல்லாமே உங்களுக்கு முற்றிலும் சாதகமாக உள்ளது, எனவே இது தைரியமாக எந்த விஷயத்தையும் செய்யும் நேரம். உங்கள் உணர்ச்சிகள், கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட அனுமதிக்காதீர்கள். முதலீடு செய்ய விரும்பினால், உடனே நிறைவேற்றுங்கள். அக்வா நீலம் அணிவது சாதகமாக இருக்கும். வெற்றியைக் கொண்டாட இன்றே புத்துணர்ச்சியூட்டும் பயணம் செல்லுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடைகள்: கன்றுகளை குழந்தைகளுக்கு தானம் செய்ய வேண்டும்
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஈடுபாட்டுடன் இருப்பீர்கள், அது உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும் தரும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வணிக ஒப்பந்தங்களில் உங்களுக்கு சாதகமும், அதிர்ஷ்டமும் ஏற்படும். வாகனங்கள், வீடு வாங்க, ஆவணங்களில் கையெழுத்திட, நகை வாங்க அல்லது வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட இன்று நல்ல நாள். பங்குச்சந்தை முதலீடு சாதகமாக இருக்கும். இன்று காதல் பூக்கும் நாளும் கூட!
அதிர்ஷ்ட நிறம்: டீல்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: ஆதரவற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்குங்கள்
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடுவதற்கான சிறந்த நாள் இன்று. சட்ட ஆவணங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். வியாபாரத்தில் பொறுப்புகள் சுமையாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் மோதல்களைத் தீர்க்க, சாதகமற்ற சூழ்நிலைகளுடன் சமரசம் செய்யவதற்கும் சரியான நாளாக இன்று இருக்கும். எதிர் பாலினத்தவரிடம் இருந்து, திறந்த மனதுடன் அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள். விளையாட்டு வீரருக்கான பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெறுவது ஆரோக்கியத்திற்கு சரியான வழியில் உதவும். சிவ க்தெய்வ வழிபாடுகளைச் செய்வது உங்கள் இலக்குகளை அடைய வெற்றியைத் தரும்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடைகள்: மஞ்சள் நிற பருப்பு அல்லது தானியத்தை கால்நடைகளுக்கு வழங்குங்கள்
#எண் 8 (நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
அலுவலகத்தில் மூத்தவர்களுடன் அல்லது வீட்டில் பெற்றோருடன் நாள் முழுவதும் செலவிட திட்டமிடுங்கள். செல்வாக்கு மிக்க நபர்களின் பலம் அல்லது குடும்ப உண்மைகளைப் பயன்படுத்தி சட்ட சிக்கல்கள் அல்லது வழக்குகள் தீர்க்கப்படும். இருப்பினும், வணிக ஒப்பந்தங்களை முறியடிக்க உங்களின் தகவள்தொடர்பும் முக்கியமானது. உங்கள் பார்ட்னரை உங்கள் விசுவாசம் ஈர்க்கும். வெளிநாட்டில் படிக்க முயற்சிக்கும் மாணவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஆன்மிக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும், எனவே இந்த நாள் நிறைவாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிகிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடைகள்: தேவைப்படுபவர்களுக்கு குடையை தானம் செய்யுங்கள்
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
தொழில் அல்லது வேலை நிமித்தமாக பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பரபரப்பான நாள். வணிக ஒப்பந்தங்கள் சுமூகமாக கையெழுத்தாகும். ஊடகம் அல்லது கல்வி, பங்குச்சந்தை, கட்டுமானத் துறையில் உள்ளவர்கள் பணம் மற்றும் புகழ் இரண்டையும் பெறுவார்கள். இளம் அரசியல்வாதிகளுக்கு இன்று புதிய பதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் எதைச் செய்தாலும் அது ஒரு வீரச் செயலாகத் தோன்றும், எனவே கூட்டுப் பேச்சு, பொதுப் பேச்சு, நேர்காணல், போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்கு இந்த நாளைப் பயன்படுத்த வேண்டும். இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப்படுவார்கள். வெளிநாட்டு வியாபாரத்தில் இன்று அதிக லாபம் கிடைக்கும்
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்: 3
நன்கொடைகள்: சிவப்பு இலை கீரைகளை தானமாக வழங்குங்கள்
மார்ச் 31 அன்று பிறந்த பிரபலங்கள்: ஷீலா தீட்சித், மீரா குமார், குரு அங்கத் தேவ், பாலாஜி ராவ், ரோஹித் தஹியா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology

source