2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அலுவலக சாவி வழங்கியது செல்லும் – உச்சநீதிமன்றம் – News18 தமிழ்

பாஜக கேட்கும் தொகுதி கொடுத்தால் மட்டுமே கூட்டணி – வி.பி துரைசாமி
பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!
ஓபிஎஸ் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டார்களா அறநிலையத்துறை அதிகாரிகள்?
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அலுவலக சாவியை வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இபிஎஸ்-க்கு அதிமுக அலுவக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்ற தீர்ப்பு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே அன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்ததால், அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் இருவரும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வசம் அலுவலகத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.
இதையும் வாசிக்க: திமுக என்றாலே கமிஷன், கலக்சன், கரப்ஷன் தான்..எடப்பாடி பழனிசாமி பேச்சு!
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இதில் இபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த பதில் மனுவில் பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது அவர் அலுவலகத்துக்கு உரிமை கோர முடியாது என்றும், கட்சிப் பணத்தை கையாடல் செய்த அவரிடம் சாவியை ஒப்படைக்க கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Chennai High court, OPS, OPS – EPS, Supreme court

source