
நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனிப்பாதை அமைத்து, தடைகள் பல கடந்து இன்று 'லேடி சூப்பர் ஸ்டார்-ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா இன்று(நவ., 18) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தாண்டு அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஆண்டு. நீண்டகால காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். அதோடு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் தாய் ஆனார். இந்த பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். நயன்தாரா இன்று நம்பர் 1 நடிகையாக இருந்தாலும் அவர் வாழ்வில் போராட்டாங்கள் ஏராளம் என்றே சொல்லலாம். நயன்தாராவின் சினிமா பயணத்தை பற்றிய ஒரு தொகுப்பு….
நடிகை நயன்தாராவின் பூர்வீகம் கேரளா என்றாலும் பிறந்தது பெங்களுருவில் தான். 1984ல் நவ., 18ல் குரியன் கொடியட்டு – ஓமனா குரியன் ஆகியோரின் மகளாக பிறந்தார் டயானா மரியம் குரியன். இவரது தந்தை விமானப்படையில் பணிபுரிந்து வந்ததால் தனது பள்ளிப் படிப்பினை டில்லி, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களில் பயின்றார்.
மேலே செல்ல ↑
All Rights Reserved
More Stories
ஐ.பி.எல் -2017 திருவிழா – கிரிக்கெட் அட்டவணை – Tamil Samayam
குரு பூர்ணிமா, குரு யார்?: ஓர் விளக்கம் – தமிழ்ஹிந்து
Ananda Vikatan – 14 December 2022 – டி.எஸ்.பி. – சினிமா … – Vikatan