2022-12-06

TNLiveNews

Minute to Minute NEWS!

இல்லம் தேடி வராத மாணவர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

கோவை:இல்லம் தேடி கல்வி மையங்களில், தொடர்ந்து விடுப்பு எடுக்கும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில், கற்றல் இடைவெளி குறைக்க, மாணவர்களின் குடியிருப்புக்கு அருகாமையில், இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில், 6 ஆயிரத்து 672 இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, தினசரி மாலை பள்ளி முடிந்ததும், ஒன்றரை மணி நேரம் வரை, வகுப்பு கையாளப்படுகிறது.

மாணவர்களுக்கான சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படுவதோடு, பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்களுக்கு, சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் கொரோனா சமயத்தில் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

ஆனால் தற்போது முழு நேரம் பள்ளிகள் இயங்குவதால், மாணவர்கள் இம்மையத்திற்கு வர ஆர்வம் காட்டுவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது. இம்மையங்கள் தொடர்ச்சியாக இயங்குவதால், மாலை நேர வகுப்புக்கு வராத மாணவர்களின் பட்டியல் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக ஒரு வாரத்திற்கு மேல் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வராத மாணவர்கள் குறித்த, விபரங்கள் திரட்டி அவர்களின் பெற்றோருக்கு, தெரிவிக்க வேண்டும் எனவும், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை:இல்லம் தேடி கல்வி மையங்களில், தொடர்ந்து விடுப்பு எடுக்கும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காலத்தில், கற்றல் இடைவெளி குறைக்க, மாணவர்களின்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source