2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

இப்படியெல்லாம் நீங்கள் நடந்துகொண்டால், உங்கள் வீட்டில் எதிர்மறை சிந்தனைகள் அதிகமாகலாம்.. மாற்றத்துக்கு இவற்… – News18 தமிழ்

நம் மனநிலையும் வீட்டின் அமைப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நாள் முழுவதும் வெளியில் இருந்துவிட்டு வீட்டில் இருப்பது சிறிது நேரம் என்றாலும் அது நம் சௌகரியத்திற்குறிய இடம் என்பதால் வீடு எப்போதும் நம் மனதிற்கு நெருக்கமானது. எனவே அப்படி இல்லை எனில் சில மாற்றங்களை உங்களுக்குள் காணலாம். அவை என்னென்ன?
அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகலாம். குடும்பத்தில் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் உடல் நிலை சரியில்லை எனில் அது நல்ல அறிகுறி இல்லை.
வாய்ப்புகள் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருந்தும் கை நழுவிப் போதல். இவ்வாறு அடிக்கடி நிகழ்ந்தால் மனம் ஒரு நிலையில் இருக்காது.
வீடு எப்போதும் ஆழமான அமைதியில் களையிழந்து காணப்பட்டால் மனதை வெகுவாக பாதிக்கும்.
எப்போதும் சோர்வான உணர்வு. தூங்கி வழிந்துகொண்டே இருத்தல்.உடலுக்கும் வீட்டிற்கும் நல்லதல்ல.
கெட்ட கனவு, எப்போதும் கெட்ட சிந்தனைகள், மற்றவர்கள் இறப்பது போன்ற உணர்வு, தான் இறப்பது போன்ற கற்பனை, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் போன்றவை உடனே அகற்றப்பட வேண்டிய விஷயங்கள்.
வேலையில் ஈடுபாடின்மை, கவனக் குறைவு.
குடும்பத்தில் மற்றவர்ளுடன் கோபமாக நடந்துகொள்வது. சண்டையிடுவது , அதனால் அவர்களைக் காயப்படுத்துவது நல்ல செயல் அல்ல.
எதிர்பாராத பிரச்னைகள், சண்டைகள் வருவதும் போவதும் எதிர்மறையான மன ஓட்டத்தை விதைக்கும்.
இப்படி ஏதேனும் தொடர்ந்து நிகழ்கிறது எனில் அதன் ஆரம்பம் எது என்பதை அறிந்து சரி செய்வதே நல்லது. வீட்டை எப்போதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற பொருட்களை வீட்டில் வைக்காதீர்கள். குப்பை சேர்க்காதீர்கள்.
வீட்டில் பாசிடிவான விஷயங்களை செய்வதால் மனம் ரிலாக்ஸாகும். இல்லையெனில் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் நிகழ காரணமாக இருக்கலாம். ஏனெனில் மேலே குறிப்பிட்ட எதிர்மறை விஷயங்கள் செயல் மற்றும் மனதுடன் தொடர்புடையவை. எனவே மனதை ரிலாக்ஸாகவும் பாசிட்டிவாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

source