2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

இன்றைய ராசி பலன் (09 டிசம்பர் 2022) : Horoscope Today, December 09 – Tamil Samayam

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். பழைய நண்பர் அல்லது உறவினருடன் திடீர் சந்திப்பு ஏற்படலாம். இது பழைய நினைவுகளை கொண்டு வரும். உங்களின் பல நாள் பிரச்சனை மதிப்புமிக்க ஒரு நபரின் உதவியால் தீர்க்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும்.

குடும்பத்திலும், பணியிடத்திலும் உங்களின் செயல்பாடு நன்றாக இருக்கும். குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்குவது நல்லது. கோபத்தைக் கட்டுப்படுத்தவும். கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படலாம்.
2023 புத்தாண்டில் எந்த ராசிக்கு அரசு வேலை கிடைக்கும்? – உங்கள் ராசி இருக்கிறதா பாருங்கள்

ரிஷபம் ராசிக்கு கிரகங்களின் நிலை சாதகமாக இருக்கும். பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க சுயபரிசோதனை செய்து கொள்வது நல்ல பயன் தரும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். கருத்து வேறுபாடுகள் என்பதால் அமைதி காக்கவும்.
வியாபாரிகள், தொழிலதிபர்கள் தடையைத் தாண்டி முன்னேற முடியும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அமைதி தரும் நாளாக இருக்கும். காதலில் துணையுடன் எந்தவிதமான வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம்.
உங்க பெயரின் முதல் எழுத்து M ஆ?… அப்போ நீங்க அதிஷ்டசாலி..!

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று கடின உழைப்பின் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிகளில் முழு கவனம் செலுத்தி செயல்படவும். ஆன்மிகம்,சமூகப் பணிகளில் தீவிரமாக பங்கேற்பீர்கள். பலரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

நண்பர்கள் வழியில் உங்களுக்கு உதவியும், ஆதரவும் கிடைக்கும். நீங்கள் பணியாற்றும் துறையில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள், உங்கள் முயற்சிகளும் பாராட்டப்படும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும்.
ஏழரை சனி யாருக்கு நடக்கப்போகிறது தெரியுமா? அதில் மிக கடினமான காலம் பற்றி விரிவான பார்வை

கடக ராசிக்கு இன்று வேலையை முழு ஆற்றலுடன் செய்து வெற்றியும் பெற முடியும். இன்று அக்கம்பக்கத்தினருடன் இருக்கும் மன வருத்தம், கருத்து வேறுபாடு பெரியவரின் உதவியால் தீர்க்கப்படும். குழந்தைகளின் பிரச்சனைக்கு தீர்வு கண்டு வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் பனிகளில் கூடுதல் கவனம் செலுத்தி முடிக்கவும். இல்லையெனில் தேவையற்ற பிரச்னையை சந்திக்க வேண்டியது இருக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.
சிம்ம ராசிக்கு நிம்மதியான நாளாக இருக்கும். பணியிடம், குடும்பம் என எதிலும் உங்களுக்கு இருந்த பிரச்னைகள் தீர்க்க முடியும். குழந்தைகளின் செயல்பாடு விஷயத்தில் கவனம் செலுத்தவும். பேச்சில் கவனம் தேவை. சில நபருடன் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது.

பணியிடத்தில் மற்றவர்களை நம்பி பணியை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்த பல நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ராஜயோகத்தால் 2023-யில் சொந்த வீடு வாங்கும் அதிஷ்ட ராசிகள்..!

கன்னி ராசிக்கு இன்று அதிகம் பணம் செலவழிய வாய்ப்புள்ளது. உங்களின் செயல்பாடுகளில் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதேனும் சுப நிகழ்ச்சி பற்றி விவாதிக்கலாம். விருந்தினரின் வருகையால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் இன்று தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிக்கவும், இல்லையெனில் சிரமம் ஏற்படலாம். வெளியூரிலிருந்து உங்களுக்கு சில நல்ல செய்திகளைப் பெறலாம். பணியில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

உங்க பெயரின் முதல் எழுத்து M ஆ?… அப்போ நீங்க அதிஷ்டசாலி..!

துலாம் ராசிக்காரர்கள் நாள் முழுவதும் ஏதாவது ஒரு வேலையில் பிஸியாக இருப்பீர்கள். மாலையில் ஓரளவு நிம்மதி கிடைக்கும். ஆன்மீகப் பணி உங்கள் மனதை ஈடுபடுத்தி, நேர்மறை ஆற்றலில் கவனம் செலுத்தவும். கவனமாக வேலையை செய்து முடிப்பது நல்லது.
குடும்பத்தில் சொத்து தொடர்பான தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை அமைதியாக பேசி தீர்க்கக்கூடிய நாள். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
விருச்சிக ராசிக்கு இன்று முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. அதனால் எந்த ஒரு செயலிலும் அவசரமாக வேலை செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் தேவையற்ற தாமதம், சிக்கலில் சிக்க நேரிடும். வேலையும் கெட்டுப் போகலாம்.
இன்று ஒரு முக்கிய நபர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அவர் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தந்தையுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும், எனவே பேச்சில் நிதானமாகவும் கண்ணியமாகவும் இருங்கள். மனைவி மற்றும் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று தொழிலதிபர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தனுசு ராசிக்காரர்களே, இன்று ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும், அவசர முடிவுகள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம், உங்களுக்குள் ஒரு நேர்மறையான மாற்றத்தை அனுபவிப்பீர்கள்.
பூர்வீக சொத்துக்கள் சார்ந்த விஷயத்தில் சாதக பலன் கிடைக்கும். பிறமொழி பேசுபவர்களின் தொடர்பு மூலம் நல்ல பலன் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு இருந்த தடைகள் நீங்கும். வெற்றி கிடைக்கும்.
மகர ராசிக்கு இன்று சற்று அலைச்சலான நாளாக இருந்தாலும் நற்பலன் கிடைக்கக்கூடியதாக இருக்கும். புதிய ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். பணத்தை சேர்ப்பதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். சேமிப்புக்கு சாத்தியம் உண்டு. மனை தொடர்பான கடன் உதவி கிடைக்கும்.

இன்று உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பெயர் கிடைக்கும்.முதலீடு விஷயத்தில் கவனமும், தகுந்த ஆலோசனையும் அவசியம்.
கும்ப ராசியினரின் திட்டமிட்ட செயல்கள் சிறப்பான வெற்றியைத் தரும். இது உங்களை நிதானமாக உணர வைக்கும். குழந்தையின் வெற்றியில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும், குடும்பத்தின் சூழ்நிலையும் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க சாதகமான நேரம்.
வியாபாரத்தில் நடக்கும் பண பரிவர்த்தனை விஷயங்களில் கவனம் தேவை. வியாபார நடவடிக்கைகளிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நாள். ஆடம்பரத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் நிதி நிலைமை மோசமடையக்கூடும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் முழு அக்கறை காட்டுங்கள்.

மீன ராசியினர் எதிரிகளை சமாளித்து நல்ல வெற்றியைப் பெற சாதகமான நாள். உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலால் உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முடிவும் எடுப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஈகோ மற்றும் கோபம் தவிர்த்து நிதானமாக செயல்பட சிறப்பான வெற்றியைக் குவிக்கக்கூடிய நாளாக இருக்கும்.

தொழில் வாழ்க்கையில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். இது உங்கள் நற்பெயரை அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை கவலைத் தரும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

source