2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

இந்த வார ராசிபலன் 19/9/2022 முதல் 25/9/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு! – Dheivegam

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். விடாமுயற்சியோடு சில விஷயங்களை முட்டி மோதி செயல்படுத்துவீர்கள். ஆனால் இறுதியில் எதிர்பாராத தோல்வி வந்துவிடும். எவ்வளவு முயற்சி செய்தாலும் இது நமக்கு கிடைக்காது என்று உதறி தள்ளுவீர்கள். அதன் மூலம் உங்களுக்கு நிறைய நன்மை கிடைக்கும். இப்படி நீங்கள் எதிர்பாராத நல்லதும் கெட்டதும் மாறி மாறி நடக்கும். வேலை செய்யும் இடத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கும். வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் வராது. கடன் சுமை படிப்படியாக குறையும். கமிஷன் தொழில் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.  விலைமதிக்க முடியாத பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். எதிர்பாராத சம்பள உயர்வு சில பேருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத செலவு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை உண்டு பண்ணும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். எதிரிகள் உங்களைப் பார்த்தாலே அப்படியே தெரிந்து ஓடப் போகிறார்கள். அந்த அளவிற்கு பதிலடி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்பட போகிறீர்கள். வியாபாரத்தில் வரும் பெரிய பெரிய சிக்கலை கூட சுமூகமாக தீர்த்து விடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். கமிஷன் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல வருவாய் உண்டு. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். எதிர்பாலின நட்பு கூடாது. மேலதிகாரிகளிடம் முன்கோபத்தை காண்பிக்கவே கூடாது. சில இடங்களில் அனுசரித்துச் சென்றால்தான் நம்மால் பிழைக்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள். உதாசீனப்படுத்தாதீர்கள், அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட்டால் அல்ல முடியாது. தினம் தோறும் நமசிவாய மந்திரம் நன்மையை கொடுக்கும்.
கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில தடைகள் வந்து போகும். எந்த தடைகளை தகர்ப்பதற்கும் நீங்கள் மன தைரியத்தோடு இருப்பீர்கள். வெற்றி உங்கள் பக்கம் தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இருந்தாலும் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் முன் ஜாமின் கையெழுத்து போடாதீங்க. எடுக்கும் காரியங்கள் கொஞ்சம் இழுபறியாக இருந்தால் கூட நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். செலவை குறைக்க வேண்டும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். உங்களுடைய நல்ல பெயருக்கு தீங்கு வரும்படி எந்த சம்பவமும் நடக்காது. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கப் போகின்றது. இத்தனை நாட்களாக உங்களை பின் தொடர்ந்து வந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக படிப்படியாக குறைய தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் வேலை பல அதிகமாக தான் இருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. மூன்றாவது நபர்கள் பேசும் பேச்சுக்கு செவி சாய்க்காதீங்க. சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.
கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் என்பது கொஞ்சம் இருக்க வேண்டும். அலட்சியமாக நாம் தொட்டதெல்லாம் வெற்றி அடைகிறது, என்று தலை கனத்தோடு நடக்கக்கூடாது. எதிலும் ஒரு பணிவு தேவை. சில சமயங்களில் மன நிம்மதி கெட்டுப் போகும். இரவு தூங்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. வார இறுதியில் நிறைய நன்மைகள் நடக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா வேலையும் சுமூகமாக முடியப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவு ஒரு முடிவுக்கு வரும். குழந்தைகளால் பெருமைப்படக்கூடிய சில விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆனால், வேலை செய்யும் இடத்திலும், சொந்த தொழிலிலும் கொஞ்சம் கவனம் தேவை. எல்லோரையும் ஒரே மாதிரி எடை போடக்கூடாது. நம்மிடம் பழகுபவர்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய மனதுக்கு இவர் சரியில்லை என்றால் அந்த நபரிடம் பழகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நிறைய செலவு செய்யாதீங்க. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். வாகனங்களில் போகும் போது கவனமாக செல்ல வேண்டும். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். மறைமுக எதிரிகளால் சில தொந்தரவுகள் இருக்கும். வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நண்பர்களை உங்களுக்கு பின்னால் குழியை தோண்டி வைப்பார்கள். யாரையும் நம்பாதீர்கள். நல்ல பெயர் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் கவனத்தோடு செயல்பட வேண்டும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். பூர்வீக சொத்தின் மூலம் வருமானம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.
தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எல்லா விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்கோபடக் கூடாது. வார்த்தைகளை விடக்கூடாது. நின்று நிதானமாக யோசித்து செய்யுங்கள். அடுத்தவங்க பிரச்சனையில் தலையிடாதீர்கள். சில இடங்களில் சில நேரங்களில் மௌன விரதம் இருப்பது மிக மிக நல்லது. உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்றே சிலர் வரிசை கட்டி நிற்பார்கள். யார் நல்லவர் யார் கெட்டவர் என்ற விவாதத்திற்கே போக வேண்டாம். மூன்றாவது நபர் சொல்வதை காதில் கேட்காதீங்க. உங்கள் மனதிற்கு சரி என்ற பட்டத்தை செய்யுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்திற்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள். எதிர்மறையாக பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். தினம்தோறும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருங்கள்.
மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. பிரச்சனைகள் என்று வந்தால் அடுத்தவர்கள் உதவி செய்வார்கள். சொந்தத் தொழிலில் கணக்கு வழக்குகளை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். பிடிவாதத்தோடு சில விஷயங்களை செய்யக்கூடாது. பெரியவர்கள் சொல்படி கேட்டு நடந்தால் நிறைய நன்மைகள் நடக்கும். அடாவடித்தனமாக எடுக்கக்கூடிய முடிவுகள் கெட்ட பெயரை வாங்கி கொடுத்து விடும். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரம் ஆகத்தான் இருக்கப் போகின்றது. நிறைய இடங்களில் நீங்கள் பேசவே கூடாது. அனாவசியமாக பேச போய் அது சண்டையில் தான் முடியும். அவசியமாக பேசினாலே எதிரில் இருப்பவர்கள் குற்றம் குறை கண்டுபிடிப்பார்கள். இதில் அனாவசியமாக பேசினால் அவ்வளவுதான். நான்கு பக்கங்களில் எதிரிகள் சூழ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எந்த காலை வாருவது என்று உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் நட்புறவாடிக் கொண்டிருப்பார்கள். பசுதோல் போற்றிய புலியை ஒருபோதும் நம்பாதீங்க. முன்கோபத்தை குறைத்து எல்லா விஷயங்களையும் அனுசரித்து செல்ல வேண்டும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் மனதில் நினைத்த காரியம் நல்லபடியாக முடியும். காதல் கை கூடி வரும். திருமணம் நிச்சயிக்கப்படும். ஆனால் சொந்த பந்தங்கள் இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வாக்குவாதங்கள் விவாதங்கள் நடக்கும். அதையெல்லாம் கடந்து தான் ஒரு நல்லதை செய்ய வேண்டியதாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உஷாராக இருங்க யாரையும் நம்பாதீங்க. புதியதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது. வாழ்க்கை துணையை அனுசரித்து செல்லுங்கள். சண்டை போடாதீர்கள். இனம் புரியாத பயம் மனதில் இருக்கும். தினம்தோறும் துர்கை அம்மன் வழிபாடு செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.
சனி பெயர்ச்சி பலன்கள்
பல்லி விழும் பலன்கள்
உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?
கந்த சஷ்டி கவசம்
Corrections policy
Factchecking policy
Ethics Policy
Privacy Policy
Terms and condition
Cric Tamil
Cricket
Cinema

source