2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

இந்திய வான்படையில் அக்னிபாத் வீரராக வாய்ப்பு! விண்ணப்பிக்க இறுதி நாள் 24 – Zee Hindustan தமிழ்

Employment: ‘அக்னிவீர்வாயு’ என்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்புடன் கூடிய வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் இறுதி நாள்
IAF Jobs 2023:  ‘அக்னிவீர்வாயு’ என்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்புடன் கூடிய வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் இறுதி நாள். ஆண் மற்றும் பெண் இருபாலரும் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். 2023 ஜனவரி நடுப்பகுதியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் – https://agnipathvayu.cdac.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
இந்திய விமானப்படையில் சேவையாற்ற இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே இந்த வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு முலம் விண்ணப்பிக்க முடியும்.  
கல்வி தகுதி 
விண்ணப்பதாரர்கள் இயற்பியல்/கணிதம்/ஆங்கில பாடங்களுடன் கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாடநெறிகளுடன் 10+2/சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் படிக்க | வேளாண் துறையில் மொத்தம் 160 காலியிடங்கள்! ஆள் எடுக்கிறது UPSC
விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படித்திருக்கவேண்டும். டிப்ளமோவில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை படித்திருக்க வேண்டும் அல்லது மெட்ரிகுலேஷன் அல்லது இடைநிலை, மெட்ரிகுலேஷன் ஆகியவற்றில் ஒரு பாடமாக ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
வயது 
27 ஜூன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும்.
அக்னிபாத் திட்டம் 
இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளுக்கு ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 25 சதவீதம் என்ற அளவில் வீரர்கள் ராணுவத்தில் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் வேறு வேலைகளுக்கு சென்று விடலாம். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | விமானநிலையத்தில் பணி புரிய ஆவலா? தட்டச்சு தெரியுமா?
விண்ணப்பத்தை ஆன்லைனில் 23-11-2022 மாலை 5 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்கவும். 
கல்விதகுதி:  கணிதம், இயற்பியல், ஆங்கிலம்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, அடாப்ளிடி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் அக்னிவீர் பணிசேர்ப்பு நடைபெறும்.
மேலும் படிக்க | பேங்க் வேலை! ஆரம்ப சம்பளமே மாதம் ரூ.63840! அசத்தும் வேலைவாய்ப்பு
மாதிரி வினாத்தாள், தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, விண்ணப்ப செயல்முறை தொடர்பான அனைத்து விபரங்களையும்  https://agnipathvayu.cdac.in/AV/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
சம்பளம்
ஐந்து வருடங்களுக்கு நியமிக்கப்படும் அக்னி வீரர்களுக்கு, முதல் வருடம் சம்பளம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும். 
அக்னிபுத் திட்டத்தின் கீழ், வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்பு மற்றும் மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி மருத்துவ விடுப்பு வழங்கப்படும். 18 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்தை வழங்க வேண்டும்.
மேலும் படிக்க | NCERTயில் வேலை செய்ய விருப்பமா? இந்த தகுதிகள் இருந்தால் உடனே விண்ணப்பிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ 
TRENDING TOPICS

source