2022-12-08

TNLiveNews

Minute to Minute NEWS!

இது போதுமே..! உலகம் முழுவதும் உள்ள தனித்துவமான மெகந்தி டிசைன்களின் லிஸ்ட்.. – News18 தமிழ்

மெகந்தி என்றாலே பிடிக்காத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். திருமணம், பிறந்த நாள், உள்ளிட்ட வீட்டில் நடக்கும் பல சுப நிகழ்ச்சிகளுக்கு மெகந்தி போட்டுக்கொள்ளும் பழக்கம் என்பது பெண்களிடம் அதிகமாகிவிட்டது. அதிலும் தற்போது வடமாநில திருமண நிகழ்வுகள் போன்று தென்னிந்தியாவிலும் மெகந்தி போடுவதற்கென்றே தனியாக ஒரு நாளை ஒதுக்கிக்கொள்கின்றனர்.அழகுக்கலை நிபுணர்கள் தங்களின் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி புதிய டிசைன்களில் மெகந்திப் போடுவதற்கு முயற்சிக்கின்றனர். உலகம் முழுவதும் பல வகையான மெகந்தி டிசைன்கள் உள்ளது. இதோ என்னென்ன? என நாமும் இங்கே தெரிந்து கொள்வோம்.
அரபிக் டிசைன் (Free-Flowing Arabic) : வளைகுடா நாடுகளில் மிகவும் சிம்பிளாக மெகந்தி டிசைன்கள் போடப்பட்டாலும், இன்றைக்கு பலர் இந்த டிசைன்கள் தான் வேண்டும் என்று கேட்கின்றனர். அந்த அளவிற்கு மிகவும் தனித்துவமானது. சிம்பிளான கோடுகள், சிம்பிள் டிசைன் தான் இடம் பெற்றிருந்தாலும், பூக்கள், இலைகள் போன்றவை கைகளை மிகவும் அழகாகக் காட்டுகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த ரங்கோலி டிசைன்களை பெண்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.
மொராக்கோ மெகந்தி (Significant Moroccan) : மரபுவழி பழங்குடியினரின் சின்னங்கள் மற்றும் வடிவமைப்புகளைப் போல் இந்த மெகந்தி டிசைன் அமைகிறது. பெண்களின் கையில் சுலபமாக போடப்படும் இந்த மாதிரியான மெகந்திகள் ஒவ்வொன்றையும் பராம்பரிய விஷயங்களை நினைவூட்டுகிறது. பெண்களின் கையில் சமகால மற்றும் தனித்துவமானத் தோற்றத்தைக் கொடுக்கும். இந்த டிசைகள் கைகள் முழுவதும் ஆக்கிரமித்துக் காணப்படும்.
ஆப்பிரிக்கன் மெகந்தி டிசைன் (Fierce African) : சுமார் 1000 ஆண்டுகளாக ஆப்பிரிக்க கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது மெகந்திகள். இதில் சிம்பிளான டிசைன், மற்றும் தடித்த கோடுகள் மற்றும் வெற்று இடங்களில் இலைகள் மற்றும் பூக்கள் டிசைன் என அரபு மெகந்தி டிசைன்களைப் போன்று அமைந்திருக்கும். பழங்கால சின்னங்களையும் இந்த மெகந்தி டிசைன்கள் நமக்கு நினைவூட்டும். இந்த வகை மெகந்திகளில் கைகளில் வைக்கப்படும் டாட்கள் அதாவது புள்ளிகள் மிகவும் பிரபலமானது.
மேற்கத்திய மெகந்தி (Quirky Western) : இன்றைக்கு வளர்ந்து வரும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு இடையில், 'ஹென்னா டாட்டூஸ்' சமீப ஆண்டுகளாக மிகவும் பிரபலமாகியுள்ளது. பராம்பரிய கலையிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு இன்றைக்குள் நவீன டிசைன்களை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்திருக்கும். மணப்பெண்கள் கையில் இன்றைக்கு உள்ள நவீன ஒவியங்களை வெளிப்படுத்துவதால் மிகவும் பிரபலமாகிவிட்டது.
பாகிஸ்தான் மெகந்தி (Ebony Pakistani) : பாகிஸ்தானிய மெகந்தியின் மிகவும் தனித்துவமானது இது. பிட்ச் கருப்பு நிறத்துடன் இருக்கும் மெகந்தி டிசைகள் அமைந்திருக்கும். நுட்பமான தடித்த அவுட்லைன்கள் மற்றும் சிக்கலான கலைப்படைப்புகளைப் பயன்படுத்தி நேர்த்தியான மற்றும் பண்பட்ட தோற்றத்தை அளிக்கிறது. இந்த வடிவமைப்புகள் திருமண விழாக்களுக்கு மிகவும் பொருத்தமானவை. இந்த பாகிஸ்தானிய மெஹந்தி, குவிமாடங்கள், மசூதிகள் மற்றும் மண்டலங்கள் போன்ற பல கட்டிடக்கலைகளும் இடம் பெற்றிருக்கும்.

source