2022-09-26

TNLiveNews

Minute to Minute NEWS!

அறை முழுக்க ‘அந்த’ போஸ்டர்.. லேட்டாப்பில் ‘ஆபாச’ வீடியோ! சினிமா ஆசையில் வந்தவர்களை சீரழித்த கும்பல்! – Oneindia Tamil

சேலம் : சேலத்தில் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு பெண்களை மிரட்டி ஆபாச படம் தயாரித்ததாக எழுந்த புகாரில் இருவரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் அதிகமாக உலாவும் பெண்களை குறி வைத்து பாலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் 500 லைக்குகள் வந்தாலே அடுத்தகட்டமாக நடிகையாகி விடலாம் என நினைத்து சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்களை குறி வைத்து அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் அரங்கேறி இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூசன்: இங்கே 2 பூனைகள் இருக்கு.. உங்க கண்ணுக்கு தெரியுதா.. கண்டுபிடிச்சா நீங்க மாஸ் தான்ஆப்டிகல் இல்யூசன்: இங்கே 2 பூனைகள் இருக்கு.. உங்க கண்ணுக்கு தெரியுதா.. கண்டுபிடிச்சா நீங்க மாஸ் தான்
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என பல இடங்களில் வாய்ப்பு தேடியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் சினிமாவில் நடிக்க துணை நடிகை தேவை என்று விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அந்த இளம் பெண் சேலம் ஸ்டேட் வங்கி காலனி இன்று குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு சென்றார் .அங்கிருந்த அலுவலகத்தில் இரண்டு பேர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என அந்த பெண் கூறிய நிலையில் அலுவலகத்தில் சிறிது நாள் உதவியாளராக வேலை பார்த்தால் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கின்றனர். இதை அடுத்து அந்த அலுவலகத்தில் இளம்பெண் வேலை செய்தார். ஆனால் அவருக்கு சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. சினிமாவில் வாய்ப்பு தாருங்கள் அல்லது சம்பளம் தாருங்கள் என அந்த இளம் பெண் கேட்ட நிலையில் அலுவலகத்தில் இருந்த இரண்டு பேரும் அந்த இளம் பெண்ணை மிரட்டி உள்ளனர். இதை அடுத்து அவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் போலீசார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெற்றது தெரிய வந்தது. அந்த அலுவலக அறை முழுக்க ஆபாச சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சேலம் மாவட்டம் வீரப்பன் பாளையத்தை சேர்ந்த வேல் சத்ரியன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர் விசாரணையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி விளம்பரம் செய்து வரும் பெண்களிடம் ஆசை காட்டி ஆபாச படங்கள் எடுத்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் லேப்டாப் கேமரா உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேல் சத்ரியன் ஜெயஜோதி ஆகியவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரிடமும் விசாரணை நடத்திப்பட்டு வருவதாகவும் கடந்த ஆறு மாதங்களாக சினிமா தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் இருவரும் அலுவலகம் நடத்தி சினிமா ஆசையில் வந்த பெண்களை ஆபாச படம் எடுத்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களிடம் ரகசியிடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.

source