2022-09-25

TNLiveNews

Minute to Minute NEWS!

அறிவியல் செய்திகள் சில வரிகளில்… – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Newspaper Subscription

ஹிந்துக்களை ஏமாற்றும் தந்திரமா இது? Comments 160
பா.ஜ.,வில் இணைகிறார் தி.மு.க.,- எம்.எல்.ஏ.,? அண்ணாமலை … Comments 67
மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிக்கு … Comments 82
அக்கவுண்டில் தவறுதலாக ஏறிய ரூ.11,677 கோடி! அதிலும் லாபம் … Comments 24
'ஆவின்' பொருட்களில் மத வாசகம்? Comments 120

செயற்கை இலை!

செயற்கை இலைகளை உருவாக்கி, அவற்றை நீரில் மிதக்கவிடுவதன் வாயிலாக மாற்று எரிபொருட்களை உருவாக்கியுள்ளனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.இயற்கை இலைகள், ஒளிச் சேரக்கை மூலம் சூரிய ஒளியிலிருந்து பச்சையம் தயாரிக்கும் அதே முறையை செயற்கை இலைகள் பின்பற்றுகின்றன. செயற்கை இலைகள் மேலிருந்து சூரிய ஒளியையும், அடியிலிருந்து நீரையும் பெற்று, ‘சின்கேஸ்’ என்ற மாசு ஏற்படுத்தாத எரிபொருளை உருவாக்குகின்றன. செயற்கை இலைகளை நீர் நிலைகளில் மிதக்கவிட்டால் எரிபொருள் இலவசமாக கிடைக்கும்.

முதிய விண் கல்

ஜப்பான் அனுப்பிய, ‘ஹயபூசா-2’ விண்கலன், நம் சூரியனை 16 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றும் ‘ரயுகு’ விண்கல்லில் இருந்து, சில மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது. அதை சோதனைக்குள்ளாக்கிய விஞ்ஞானிகள், அதிலுள்ள சில துணுக்குகடள், நமது சூரியக் குடும்பத்திற்கும் முந்தைய காலத்தவை என்பதை கண்டறிந்துள்ளனர். நமது சூரியக் குடும்பம் 7 பில்லியன் ஆண்டுகள் பழசு. ஆனால், ரயுகுவின் ஆயுள் அதைவிட பழசு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வலது நல்லது

மாத்திரைகளை உண்பதே, அவை விரைந்து பலன் தரவேண்டும் என்பதற்குத்தான். இது குறித்து அமெரிக்காவிலுள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை செய்தனர். அதன்படி, ஒருவர், நின்றபடியே இருந்தால், சாப்பிட்ட மாத்திரை பலன்தர 23 நிமிடங்கள் ஆகும். இடதுபுறம் சாய்ந்து படுத்தால், உண்ட மாத்திரை பலன்தர 100 நிமிடங்கள் ஆகும். இதுவே, வலது பக்கமாக சாய்ந்து படுத்தால், மாத்திரை 10 நிமிடங்களில் பலன் தரும்!

கூட்டு வேட்டை

வவ்வால்கள், எதிரொலியை வைத்து, இரை உள்ள இடத்தை அறிகின்றன. அதேபோல, அவை பிற வவ்வால்களுடன் கூட்டு வேட்டை ஆடவும் செய்கின்றன. அவை அருகருகே பறக்கையில், நிறைய பூச்சிகள் உள்ள இடத்தை ஒரு வவ்வால் பார்த்ததும், செவியுணரா ஒலி அலைகள் மூலம் பிற வவ்வால்களுக்கு தெரிவிக்கும். அவையும் இரைகள் உள்ள இடத்திற்கு வந்து வேட்டையாடும். இது குறித்த ஆய்வு ‘புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயன்சஸ்’ இதழில் வெளிவந்துள்ளது.

ஆஸ்துமாவுக்கு டாட்டா?

மகரந்தம், துாசி போன்றவை, நுரையீரலுக்குள் நுழையும்போது, ஒவ்வாமை ஏற்படும். இதுதான் ஆஸ்துமா. நுரையீரல் குழாய்கள் சுருங்கவும், இறுகவும் செய்து, எதிர்ப்பைத் தெரிவிப்பதே இதற்குக் காரணம். அத்தகைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் புரதங்களை, மழுங்கடிக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை இங்கிலாந்திலுள்ள ஆஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதை எலிகள் மீது சோதித்தபோது, அவற்றின் ஒவ்வாமை விரைவிலேயே நீங்கியது. ஆஸ்துமாவுக்கு தீர்வு விரைந்து வரும் என நம்பலாம்.

செயற்கை இலை!செயற்கை இலைகளை உருவாக்கி, அவற்றை நீரில் மிதக்கவிடுவதன் வாயிலாக மாற்று எரிபொருட்களை உருவாக்கியுள்ளனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.இயற்கை இலைகள், ஒளிச்
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
நன்றி. தினமலர்
For technical contact : webmaster@dinamalar.in
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
You may have to select a menu option or click a button.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source