2022-12-09

TNLiveNews

Minute to Minute NEWS!

அறிவியல் ஆயிரம் – Dinamalar

சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
iPaper
Subscription

அறிவியல் ஆயிரம்

டீசல் உருவான கதை

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கச்சா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலிருந்து தான் பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படுகிறது. உலகில் முதன்முதலாக கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒருவித எண்ணெயைப் பயன்படுத்தி ருடால்ப் கார்ல் டீசல் எனும் விஞ்ஞானி 1893ல் ஓர் இன்ஜினை வடிவமைத்தார். அதற்கு அவரது பெயரை தழுவி டீசல் இன்ஜின் என பெயரிடப்பட்டது. இதற்கான காப்புரிமையும் பெற்றார். அதில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் டீசல் என ஆனது. ருடால்ப் டீசல் 1858 மார்ச் 18ல் பிரான்சில் பிறந்து ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

தகவல் சுரங்கம்

ஏழு கடல் பெண்

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பூலா சவுத்ரி. 1970 ஜன. 2ல் ஹூக்ளியில் பிறந்தார். 9 வயதில் நீச்சல் போட்டியில் பங்கேற்க தொடங்கினார். உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள ஏழு கடல் கால்வாய்களில் நீந்திய முதல் பெண் வீராங்கனை என்ற சாதனை படைத்தவர். ஆங்கில கால்வாயை இருமுறை நீந்திக் கடந்துள்ளார். மேற்கு வங்கத்தின் நந்தன்பூர் தொகுதியில் 2006 – 2011ல் எம்.எல்.ஏ., வாக இருந்தார். இந்திய தேசிய நீச்சல் அணியில் பங்கேற்றவர். அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். 30 கி.மீ., துாரத்தை 3 மணி நேரம், 26 நிமிடங்களில் நீந்திக்கடந்து சாதனை படைத்தவர்.
அறிவியல் ஆயிரம்டீசல் உருவான கதைஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கச்சா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலிருந்து தான் பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படுகிறது. உலகில் முதன்முதலாக
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

source