2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

"அதிமுக-வை அழிக்க நினைக்கும் திமுகவிற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது" – சசிகலா – Puthiya Thalaimurai

”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்கு பின் கட்சியின் இக்கட்டான சூழலில் ஆட்சியை காப்பாற்ற உங்கள் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகியை முதல்வர் ஆக்கினேன்” என ஆத்தூரில் நடைபெற்ற புரட்சி பயணம் பிரச்சாரத்தின் போது சசிகலா பேசினார்.
புரட்சி பயணம் என்ற தலைப்பில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்திற்கு வி.கே.சசிகலா வருகை தந்துள்ளார். அப்போது மாவட்ட எல்லையான தலைவாசலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஆத்தூர் மணிக்கூண்டு பகுதியில் வேனில் இருந்தபடி பொதுமக்களிடையே பேசினார்.
”சேலம் மாவட்டத்தில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த அதிமுக ஆட்சிக்காலம் தான் மக்களுக்கான ஆட்சியாக பொற்காலமாக இருந்தது. அப்போது சத்துணவு திட்டம், மகளிர்க்கான திட்டம், உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தனர் அதேபோல் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இறுதி மூச்சு வரை மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தார். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினாலே தமிழகம் முன்னேற்றம் பெறும்.
image
எந்த ஒரு சூழ்நிலையிலும் எவ்வளவு வேற்றுமை இருந்தாலும் அவற்றை சரி செய்து தொடர்ந்து இயக்கத்தை வலுபடுத்தாமல் ஓயமாட்டேன். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் இக்கட்டான சூழ்நிலையில் அதிமுகவை மீட்டுள்ளோம். எனவே அன்றைய காலத்தில் நடந்ததை நிர்வாகிகள் நினைத்து பார்த்தால் தற்போதைய பிரச்னை சரியாகி விடும். 2024ல் அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பான வெற்றி பெறுவோம். என் அக்கா என் அருகிலிருந்து நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.
திமுகவினர், அதிமுகவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். திமுகவிற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக தான் பொறுமையாக இருக்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியை காப்பாற்ற உங்கள் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகியை முதல்வர் ஆக்கினேன். இன்றைய நிலைமை யார்த்து கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
image
திமுக. ஆட்சி பொறுப்பேற்று இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை. மேடையில் மட்டும் வசனங்கள் பேசி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி உள்ளது. மாநகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. திரைப்படத் துறையில் ஆளும் கட்சி குடும்பத்தினர் தலையீடு அதிகரித்துள்ளது. கல்லூரி, பள்ளி அமைந்துள்ள பகுதிகளின் அருகாமையிலேயே போதை பொருள் அதிகாரிள்ளது.
மேட்டூர் – காவரி உபரியை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும், இராமநாயக்கன் பாளையம் கல்லாற்றில் அணை கட்டவேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் கொஞ்சம் நாள் பொறுத்திருங்கள், அதிமுக ஆட்சிக்கு வந்த பின் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். நிர்வாகிகள் தொண்டர்களை மனதில் வைத்து ஒன்றுமையாக செயல்படுங்கள்” என பேசினார்.
மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துணை தாசில்தார் துன்புறுத…
மதுபோதையில் நண்பனை வெட்டிக் கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்…
போலி சிபிஐ அதிகாரி அட்டையை வைத்து போலீஸையே…
Nov 22, 2022 8:31
`கரன்ட் பில்’லால் நொந்துப்போன வங்கி ஊழியர்…
Nov 22, 2022 7:56
அரசு பேருந்தில் போதை மாத்திரைகள் கடத்த முய…
Nov 22, 2022 7:35
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர்: இங்க…
Nov 22, 2022 7:13
“நான் உங்கள் வீட்டு பிள்ளை”- கன்னியாகுமரி…
Nov 22, 2022 7:00
நீண்ட காத்திருப்பில் சஞ்சு சாம்சன்.. 3வது …
Nov 21, 2022 22:09
விஜய்யின் படங்கள் சந்திக்கும் பிரச்னைகளும்…
Nov 21, 2022 20:16
இந்திய சமூகத்திற்கு ஏற்றதல்லவா? – டெல்லி க…
Nov 19, 2022 22:50
அமானுஷ்ய பிரச்னையில் மிரட்டலான ஹாரர் ஜானர்…
Nov 19, 2022 20:19
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர்: இங்கிலாந்து நெதர்லாந்து அணிகள் வெற்றி
Nov 22, 2022 7:13
“நான் உங்கள் வீட்டு பிள்ளை”- கன்னியாகுமரியில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Nov 22, 2022 7:00
தமிழ்நாடு முழுவதும் ஸ்தம்பித்த அரசு கேபிள் டிவி! பின்னணியில் அதிர்ச்சி.. நடந்…
Nov 21, 2022 22:33
தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்
Nov 21, 2022 22:27
நீண்ட காத்திருப்பில் சஞ்சு சாம்சன்.. 3வது டி20 போட்டியிலாவது வாய்ப்பு கிட்டுமா?
Nov 21, 2022 22:09
“கொலைகாரனுக்கு பின்னே நிற்கிறார்கள்” – கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் காட்டம்
Nov 21, 2022 22:28
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved

source