2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்… சுயேட்சை சின்னத்தில் போட்டி? – News18 தமிழ்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? தடுமாறும் தலைவர்கள்.. !
மீண்டும் தாய் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி – கோவை செல்வராஜ்
நீதிமன்றத்தை அவமதிக்காதீர் என ஓபிஎஸ் தரப்பிடம் உச்சநீதிமன்றம் காட்டம்
உள்ளாட்சி அமைப்புகளின் இடைத்தேர்தலில், விண்ணப்பங்களில் அதிமுக கட்சித் தலைவர்கள் கையெழுத்திடாமல் இருப்பதால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சுயேட்சை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து ஃபார்ம் ஏ (FORM A) மற்றும் ஃபார்ம் (FORM B) ல் கையொப்பமிடுவதில் கட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக சிக்கல் தொடர்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்றுடன் முடிந்த நிலையில், வரும் 30 ஆம் தேதிக்குள்ளாக வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாகவே FORM A மற்றும் FORM B யை வழங்கினால் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை மாலை 3 மணியுடன் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடையும் போது, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
அதற்குள்ளாக கட்சித்தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நாளை மாலைக்குள் FORM A மற்றும் FORM B யை சமர்ப்பிக்க தவறினால், அதிமுக வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Must Read : சுடுகாட்டில் மர்ம குழி.. மகள் வாங்கிய கடனுக்காக கொல்லப்பட்ட பெண் – கள்ளக்குறிச்சியை அதிர வைத்த சம்பவம்
இந்நிலையில், விண்ணப்ப படிவங்களில் ஓபிஎஸ் கையெழுத்திட தயாராக உள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில்தான் முடிவெடுக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Local Body Election 2022

source