2023-01-29

TNLiveNews

Minute to Minute NEWS!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்.. – News18 தமிழ்

மீண்டும் தாய் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி – கோவை செல்வராஜ்
யார் தீபம் முதலில்? ஓபிஎஸ் மகன் – திமுகவினர் வாக்குவாதம்.!
நீதிமன்றத்தை அவமதிக்காதீர் என ஓபிஎஸ் தரப்பிடம் உச்சநீதிமன்றம் காட்டம்
திமுகவில் இணையும் கோவை செல்வராஜ்! இதுதான் காரணமா?
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பேனர்களில் ஓபிஎஸ் படத்தை நிர்வாகிகள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில அதிமுகவில் கிழக்கு மாநிலம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மேற்கு மாநிலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் உள்ளது. இந்த நிலையில்  புதுச்சேரி உப்பளம் தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுகவினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடினர். அப்போது  தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓ.பன்னீர்செல்வம் படத்தை கிழித்தனர்.
தொடர்ந்து அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுகவின் உதவியோடும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணப்படியும், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவுக்கு விரோதமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் சதிசெயலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொண்டர்கள் முறியடித்துள்ளனர் என்றார்.

அதிமுகவுக்கு எதிராக, திமுகவின் பி டீமாக செயல்படும் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். இதை தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம். ஓபிஎஸ், அவரின் மகன் மு.க.ஸ்டாலின் சிறப்பான முதலமைச்சராக செயல்படுகிறார் என கூறி வருகின்றனர்.
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுகவை அழிக்கும் நோக்கில் அவர்கள் செயல்படுகின்றனர். ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பதவியேற்க கிழக்கு மாநில அதிமுக முழு ஆதரவை தருகிறது. தமிழகம், புதுச்சேரியில் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நீக்க வேண்டும்.
Must Read : அதிமுக கூட்டத்தில் பேசியது என்ன..? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
காரைக்காலில் உள்ள 12 பொதுக்குழு உறுப்பினர்களும், புதுச்சேரி கிழக்கு மாநிலத்தின் 23 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் மேற்கு மாநிலத்தில் உள்ள 21 உறுப்பினர்களில் 11 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.
செயலாளர் உட்பட கையெழுத்திடாத 10 பேரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அதிமுகவையும் இரட்டை இலையையும் முடக்க நினைப்பவர்கள் கட்சிக்கு துரோகி.  அவர்கள் கழக துரோகிகள்.  அதிமுக துரோகி பட்டியலில் ஓபிஎஸ் முதலிடத்தில் உள்ளார். அவர்களது புகைப்படம் இங்கு அனுமதிக்கப்படாது என்றார்.
தமிழகத்தை போல புதுச்சேரியிலும் ஒற்றை தலைமையே வரும் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, OPS, OPS – EPS

source