2022-11-29

TNLiveNews

Minute to Minute NEWS!

அடேங்கப்பா… திருச்சியில் மும்மூர்த்திகளும் அருளும் உத்தமர் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா..! – News18 தமிழ்

ராமேஸ்வரத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – 4பேர் படுகாயம்
தரம் பார்த்து ஆடுகளை திருடும் திருடன்.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
சந்தையான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – கோவையில் விவசாயிகள் நூதன போராட்டம்.
நாட்டு ஆடுகளுக்கு புகழ் பெற்ற சாத்தூர் ஆட்டுச்சந்தை பற்றி தெரியுமா?
திருச்சி மாவட்டத்தில் உள்ள உத்தமர்கோவில் அருள்மிகு புருஷோத்தம பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 3ஆவது திவ்ய தேச தலமாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற தலமாக இங்கு, பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்களின் தேவியர்களுடன் தம்பதி சமேதராக அருள் புரிகின்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், ஸ்ரீரங்கத்தில் இருந்து 4 கிமீ தொலைவிலும் இருக்கிறது இந்த உத்தமர்கோவில்.
இந்த உத்தமர் கோவிலானது கதம்பவனம், பிச்சாண்டவர் கோயில், திருக்கரம்பனூர் என்றும் அழைக்கப்படுகிறது. மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 3ஆவது திவ்ய தேசம் ஆகும். பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலமாக இருந்து வருகிறது.
திருச்சியில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் குகை மீன் கண்காட்சி!
மது கொடுத்து 16வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.. திருச்சியில் பயங்கரம்
ராமஜெயம் கொலை வழக்கு.. சசிகலாவுக்கு சொந்தமான தியேட்டரில் அதிரடி விசாரணை..! திருச்சியில் பரபரப்பு!
திருச்சியில் இரவை பகலாக்கிய ஆயிரக்கணக்காண தீபங்கள்: காட்டழகிய சிங்கர் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு
அரசு வேலை வாங்கித்தர்றேன்.. ரூ.80 லட்சத்தை சுருட்டிய மோசடி இளைஞர்.. திருச்சியில் பகீர் சம்பவம்
தாயுமானவர் சுவாமி கோவில் யானையின் பர்த்டே கொண்டாட்டம்.. திருச்சி மாவட்ட இன்றைய (நவ. 17( முக்கிய நிகழ்வுகள்
கிணற்றில் பாய்ந்த டிராக்டர் | திருச்சி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள் – நவம்பர் 18, 2022
பயணிகள் கவனத்திற்கு… திருச்சிக்கு வரும் இந்த ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது
திருச்சி மாவட்டத்தில் நாளை 70 இடங்களில் மின்தடை…. உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணுங்க!
திருச்சியில் நாளைய மின்தடை பகுதிகள் – இதில் உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க
எலிக்காக வைக்கப்பட்ட மின்சாரம்.. வயலுக்குச் சென்ற சிறுவன் பரிதாப பலி.. திருச்சியில் சோகம்!

தல வரலாறு
சிவனைப் போலவே பிரம்மாவும் ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒருசமயம் ஈசன் என்று நினைத்து பிரம்மனுக்கு பணிவிடைகள் செய்யத் தொடங்கினார் பார்வதி. இந்த சம்பவத்தால், இனியும் குழப்பம் வரக்கூடாது என்று எண்ணி சிவன், பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்தார். இதனால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

அதோடு மட்டுமல்லாமல் பிரம்மதேவருடைய கபாலமும் (மண்டை ஓடு) அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. ஈசனுக்கு படைக்கப்பட்ட உணவு அனைத்தும் கபாலமே எடுத்துக் கொண்டது. அவர் பசியால் வாடினார்.
இதன் காரணமாக அந்த கபாலத்தையே யாசகம் வாங்கும் பாத்திரமாக ஏந்திக் கொண்டு பிட்சாடனர் கோலத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அப்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தபோது, திருமால், ஈசனின் பாத்திரத்தில் உணவு அளிக்கும்படி திருமகளிடம் கூறினார். திருமகளும் ஈசன் வைத்திருந்த கபாலத்தில் உணவிட்டாள். அதுவே பூரணமாக நிரம்பி ஈசனின் பசியைப் போக்கியது. இதனால் இத்தலத்தில் இருக்கும் தாயார் ‘பூரணவல்லி’ என்ற பெயரைப் பெற்று விளங்குகிறார். திருமால் பள்ளி கொண்ட கோலத்தில் ஈசனுக்கு காட்சி தந்தார்.
பிரம்மனுக்கு பூலோகத்தில் தனக்கு ஒரு கோவில் இல்லை என்ற மனக்குறை இருந்தது. திருமால், பிரம்மதேவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மனும் இந்த தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டு தவம் செய்யத் தொடங்கினார். பிரம்மனின் பக்தியை சோதிக்க எண்ணிய திருமால், கதம்ப மரத்தின் வடிவமாக அங்கு நின்று கொண்டார். இதை உணர்ந்த பிரம்மன் கதம்ப மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டார். பிரம்மனின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள், பிரம்மதேவருக்கு காட்சியளித்து எப்போதும்போல் இந்த தலத்தில் இருந்து தன்னை வழிபட்டு வருமாறு கூறினார்.
அத்துடன், பிரம்மதேவருக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும், இந்த தலத்தில் தனியாக பிரம்மதேவருக்கு வழிபாடு இருக்கும் என்று கூறினார். பிரம்மாவும் இத்தலத்தில் தங்கினார். பிற்காலத்தில் பிரம்மதேவருக்கு இங்கே தனி சந்நிதி எழுப்பப்பட்டது. பிரம்மதேவருக்கு இடது புறத்தில் ஞான சரஸ்வதி தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஞான சரஸ்வதியின் கையில் ஓலைச் சுவடி, ஜெபமாலை உள்ளது.
இந்த கோவிலில் பெருமாளுக்கு பின்புறத்தில் மேற்கு பார்த்தபடி சிவன் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இவர் பிரகாரத்தில் பிட்சாடனர் கோலத்தில் (உற்சவர்) அருள்பாலிக்கிறார். சிவன், பிட்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் ‘பிச்சாண்டார் கோயில்’ என்றும், திருமால் கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் ‘கதம்பனூர்’ என்றும் ‘கரம்பனூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
கணவனும், மனைவியும் இல்லற வாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை ‘உத்தமர் கோயில்’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஈசன், பிரம்மதேவன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சந்நிதிகள் அவர்கள் துணையுடன் அருள்பாலிக்கின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். இத்தலம் சப்தகுரு தலம் என்று அழைக்கப்படுகிறது. சிவகுரு தட்சிணாமூர்த்தி, திருமாலின் குரு வரதராஜர். குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்கிராச்சாரியர் ஆகிய 7 குரு சுவாமிகளும் குருவுக்குரிய இடத்தில் இருந்து அருள்பாலிக்கின்றனர். குருபெயர்ச்சியின்போது அனைவருக்கும் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகள் நடைபெறும்.
இங்கிருக்கும் பிரம்மதேவருக்கு தயிர் சாதம், ஆத்தி இலை படைத்தும் சரஸ்வதி தேவிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாற்றியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வியில் சிறந்து விளங்குவர் என்கின்றனர் பக்தர்கள். மேலும், குருப்பெயர்ச்சி காலத்தில் பிரம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கிரக தோஷங்கள் விலக, தம்பதியர் ஒற்றுமை சிறக்க இத்தல பெருமாளை வணங்குவது நன்மை பயக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy

source