2023-01-30

TNLiveNews

Minute to Minute NEWS!

அக்னி வீரர்களின் வயது உச்சவரம்பை 23 ஆக உயர்த்திய மத்திய அரசு – News18 தமிழ்

புதிய பரிணாமம் எடுக்கும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள்..!
நாட்டில் புதிய வேலைவாய்ப்பு குறைகிறதா… தரவுகள் சொல்வது என்ன?
அரசு மருத்துவமனையில் பல்வேறு வேலைவாய்ப்பு : உடனே விண்ணப்பியுங்கள்!
இலவச பயிற்சி.. கைநிறைய சம்பளம்.. முழு விவரம் இங்கே!
கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் ஆட்சேர்ப்பு நடைபெறாததை அடுத்து, அக்னி வீரர்களின் வயது உச்சவரம்பை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
முன்னதாக, இந்திய பாதுகாப்புப் படைகளில் இணைவதற்கான ’அக்னிபாத்’ என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், ஆயுதப் படைகளில்  4 ஆண்டுகள்  இளைஞர்கள் இணைந்து பணியாற்றலாம்.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்திய ராணுவத்தில் 97,177 வீரர்கள் பணியிடங்களும், விமானப்படையில் 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 11,166 வீரர்கள் பணியடங்களும் காலியாக உள்ளன. அக்னிபாத் திட்டத்தின் கீழ்,  இந்தாண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.  இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும்.
இதையும் வாசிக்க:  அக்னிபாத் ராணுவ வேலைவாய்ப்பு திட்டம் பயன் தருமா? விளக்கும் முன்னாள் அதிகாரி
கொரோனா பெருந்தொற்று முடக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.  கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இந்த நிலையே தொடர்ந்தது.    
சிப்பாய் பொதுப் பிரிவு போன்ற பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 21 ஆக இருப்பதால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணி உச்ச வரம்பை கடந்து நிற்கின்றனர். வயதுக்கான தகுதியை முற்றிலும் இழந்த காரணத்தினால்,  அக்னிபத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதையும் வாசிக்க:  ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம்.. 4 ஆண்டு பணி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்… முழு விவரம்
இந்நிலையில், பெற்றோர் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று, அக்னி வீரர்களின் வயது உச்சவரம்பை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில்  பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று கூறப்படுகுறிது.
4 ஆண்டு காலத்திற்குப் பிறகு, ராணுவப் பதவியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், அகில இந்திய அளவில் 25% அக்னிவீரர்கள் ராணுவத்தில் (Formal Recruitment ) பணியமர்த்தப்படுவார்கள். வெளிப்படைத்தன்மையுடன் அகில இந்திய அளவில் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு நடைபெறும் (Merit Based Recruitment Process). அப்படி, தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு முந்தைய 4 ஆண்டுகள் பணி அனுபவமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Army jobs, Recruitment

source